Tuesday, March 29, 2016

கோவில் கருவறையும் .. அதன் அனுமான உதாரணமும் .. பாகம் - 1

கோவில் கருவறையும் .. அதன் அனுமான உதாரணமும் .. பாகம் - 1

சுமார்50 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் logic என்று பாடம் இருந்தாதாக சொல்வார்கள்..
அதெல்லாம்இப்போது தேவை இல்லை என்று பாடத்திட்டத்தில்எடுத்து விட்டார்கள்.

எதற்க்காக இதை சொல்லுகிறேன் என்றால் இங்கு (FB) படித்து விட்டு பலர் illogical கேள்விகள் கேட்பதன் காரணத்தை சொன்னேன்..
"அனுமான பிரமாணம்.... அது மாறி.. அதே இல்லை.."
இது தர்க்க சாஸ்திரத்தில்.. ஒரு பொருளை விளக்க அதை போன்ற ஒன்றை கொண்டு விளக்குவது என்று சொல்வது...
தற்கால விஞ்ஞான பொருள்களை கொண்டு இவற்றை ஒரு அளவிற்கு விளக்க முயற்சி செய்யலாம்!!
விஞ்ஞானத்தின் ஒரு பரிமாணமான மின்சாரத்தின் பல பரிமாணங்களை இன்னும் முழுமையாக உணரமுடியவில்லை
அப்படியா.என்பவர்களுக்கு..மின்சார மின்னல் பூமியை நோக்கி பாயாமல் வானத்தை நோக்கி செல்வதை NASA space shuttle இல் கண்டு வியந்து இருக்கிறார்கள். electricity always flows towards earth!!??? is not always right??
கோவிலின் கருவறை இதை போன்று ஒரு power transformer போன்று பலரால் அணுக முடியாமல் தனிமை படுத்தப்பட்டு .. "புனிதப்பட்ட" (அப்படி ஒரு பாமரத்தனமான வார்த்தையை பயன்படுத்தி) படுகிற இடமாக அறியப்படுகிறது.
நமது சனாதமதம்.. என்றுமே ஞானத்தை அடைய முக்கியத்துவம் குடுப்பதால்.. இந்த கோவில் நிர்மாணம்.. அதன் உள்ளே அமைந்துள்ள விசயம் பற்றிய அறிவு.. அது எப்படி வணங்குகிற மக்களின் வாழ்க்கையில் மாற்றங்களை உண்டாக்குகிறது என்பதை..பலர் அறிய பொதுவில் வைக்கவில்லை என்று நினைக்கிறேன்
இன்று நாம் அறிந்த சில குறைவான விஞ்ஞான அறிவை கொண்டு எழுத விழைகிறேன்..
கவலை படாதீர்கள் .. கோவில் என்பது வெறும் மின்சார transformer இருக்கிற இடம் மட்டும் இல்லை..
கொடி மரம் (umbilical cord தான்அது!!) என்பது என்ன.. பலி பீடம் என்பது என்ன? பொருள் உலகத்தில் இல்லாத இறைவனை எப்படி சாப்பிட வைப்பது??
பல விசயங்கள் பார்ப்போம்..
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர்கள்அறிந்த இந்த இறைதன்மையை பூமியில் நிறுத்தி மனித வாழ்விற்கு பயன் பட செய்த கோவில் நிர்மாணம் பற்றிய இருளுளில் இருக்கும் அந்த அறிவை வரும் நாட்களில் பார்ப்போம்..
நீங்கள் தயாரா??? நிறைய கேள்வி உள்ளவர்கள் அதை இப்பவே எழுதலாம்.. அதை கொண்டு மேலே நாம் செல்லலாம்..
i can build upon your queries my way through my article .. an interactive way..
so start you queries ...
விஜயராகவன் கிருஷ்ணன்